உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவர் ஓட்டிய கார் சாலையில் பல்டி போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்

மாணவர் ஓட்டிய கார் சாலையில் பல்டி போலீசை பார்த்து பயந்ததால் விபரீதம்

அண்ணா நகர், செங்குன்றத்தைச் சேர்ந்த 18 வயது மாணவன், பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு பொறியியல் படிக்கிறார். இவர், நேற்று மாலை தோழியுடன் அண்ணா நகர், டவர் பூங்காவிற்கு 'டாடா டிகோர்' காரில் வந்துள்ளார்.சாலையோரத்தில் காரை நிறுத்தி, காரில் அமர்ந்தபடி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். பொதுமக்களுக்க இடையூறாக சாலையில் கார் நின்றதால், அவ்வழியாக சென்ற ரோந்து போலீசார் காரின் கதவை தட்டியதாக கூறப்படுகிறது.இதனால் பதற்றமடைந்த மாணவன், உடனடியாக காரை இயக்கி அங்கிருந்து வேகமாக தப்பினார். அங்கிருந்து சென்ற கார் தாறுமாறாக ஓடி, 'டபிள்யூ' பிளாக் 7வது தெரு அருகில் திரும்பும்போது, சாலையோரம் நின்றிருந்த நான்கு இருசக்கர வாகனங்கள் மீது மோதி, சாலையின் நடுவே கவிழ்ந்து நின்றது.அண்ணா நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காருக்குள் 'ஏர்பேக்'கில் சிக்கிய இருவரையும் மீட்டனர். இந்த விபத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.விபத்து ஏற்படுத்திய கார் மோதியதில், 'ஹோண்டா டியோ, ஸ்கூட்டி, அப்பாச்சி, யூனிகான்' ஆகிய நான்கு இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.காரை பறிமுதல் செய்த போலீசர், விபத்து ஏற்படுத்திய மாணவனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சில மணிநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை