உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / எமர்ஜன்சி பொத்தானை அழுத்தி பஸ்சில் மாணவர்கள் அட்டூழியம்

எமர்ஜன்சி பொத்தானை அழுத்தி பஸ்சில் மாணவர்கள் அட்டூழியம்

அம்பத்துார் :கோயம்பேடில் இருந்து ஆவடி செல்லும் தடம் எண் 77 மாநகர பேருந்து, நேற்று முன்தினம் மாலை கோயம்பேடில் இருந்து, 50க்கும் மேற்பட்ட பயணியருடன் ஆவடி நோக்கி சென்றது.அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் பேருந்து நிறுத்தத்தில், அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். அவர்கள் பேருந்தில் அரட்டை அடித்தபடியும், 'எமர்ஜன்சி' பொத்தானை அடிக்கடி அழுத்தியபடியும் சென்றுள்ளனர். பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கண்டித்தும், மாணவர்கள் பொருட்படுத்தவில்லை என தெரிகிறது.இந்த நிலையில், அம்பத்துார், உழவர் சந்தை பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றபோது, மீண்டும் எமர்ஜன்சி பொத்தானை அழுத்தியதால், ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பேருந்தை மேற்கொண்டு இயக்காமல் சாலையோரமாக நிறுத்தியுள்ளனர். இதனால் பயணியர் அவதி அடைந்தனர்.அம்பத்துார் டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் அருகே உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், அடிக்கடி இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டிய பயணியர், மாணவர்களை ஒழுங்குபடுத்த சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை