உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் மண் குவிந்து அவதி

சாலையோரம் மண் குவிந்து அவதி

திருநின்றவூர், சென்னை -- திருத்தணி தேசிய நெடுஞ்சாலை, நெமிலிச்சேரி முதல் திருநின்றவூர் வரை, 2 கி.மீ., துாரத்திற்கு, சாலையின் ஓரத்தில் அதிக அளவில் மண் சேர்ந்துள்ளது. இந்த சாலையில், கனரக வாகனங்கள் உள்ளிட்டவை வேகமாக செல்லும் போது, இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் மண் விழுந்து அவதிப்படுகின்றனர். சில நேரம், கீழே விழுந்தும் காயமடைகின்றனர். குறிப்பாக, திருநின்றவூர் சாலையோரத்தில், அதிக அளவில் மணல் கலந்த மண் குவிந்துள்ளது.ஆனாலும், திருநின்றவூர் நகராட்சி அதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், சாலை ஓரங்களில் குவிந்துள்ள மணல் கலந்த மண்ணை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை