உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய மகளிர் கால்பந்து போட்டி தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

 தேசிய மகளிர் கால்பந்து போட்டி தமிழக அணி அரையிறுதிக்கு தகுதி

சென்னை: ஆந்திர மாநிலத்தில் நடந்து வரும் தேசிய மகளிர் ஜூனியர் கால்பந்து போட்டியில், அருணாசலப் பிரதேசம் அணியை வீழ்த்திய தமிழக அணி, அரை யிறுதிக்கு தகுதி பெற்றது. அகில இந்திய கால்பந்து சங்கம் மற்றும் ஆந்திர மாநில கால்பந்து சங்கம் இணைந்து, மகளிருக்கான 'தேசிய ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் டையர் - 1' போட்டி, ஆந்திரா, அனந்தபூரில் உள்ள ஆர்.டி.டி., மைதானத்தில், 18ல் துவங்கியது. இதன் 'ஏ' பிரிவில் ஆந்திரா, ராஜஸ்தான், அருணாசலப் பிரதேசம் அணிகளுடன் தமிழக அணியும் இடம்பெற்றுள்ளது. லீக் சுற்றின் முடிவில், ஒவ்வொரு பிரிவிலிருந்தும், தலா ஒரு அணி, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும். அந்த வகையில் தமிழக அணி, தன் கடைசி லீக் போட்டியை அருணாசலப் பிரதேசம் அணிக்கு எதிராக நேற்று மோதியது. அதற்கு முன் நடந்த இரு போட்டிகளில் ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் அணிகளை வீழ்த்திய தமிழக அணி, 7 - 0 என்ற கோல் கணக்கில் அருணாசலப் பிரதேசம் அணியையும் தோற்கடித்தது. தமிழக அணி சார்பில் நயானா, 15, மூன்று கோல் அடித்து அசத்தினார். துர்கா, 15; தர்ஷினி, 15; கோபிகா செல்லம்மாள், 15; சஹானா, 15, ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். தமிழக அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, 9 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்து, அரையிறுதிக்கு தகுதி பெற்று, வரும் 25ல், மணிப்பூர் அணியை எதிர்கொள்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை