உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சக ஊழியர்களின் கிண்டல்? ஓட்டேரி வாலிபர் தற்கொலை!

சக ஊழியர்களின் கிண்டல்? ஓட்டேரி வாலிபர் தற்கொலை!

ஓட்டேரி, ஓட்டேரி, மங்களபுரத்தைச் சேர்ந்தவர் செல்வம், 26. இவரது மனைவி பிரேமா. செல்வம், வானகரத்தில் உள்ள ஸ்டீல் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.கடந்த நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர், இரவு 8:00 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். மனைவியிடம், 'வேலை செய்யும் இடத்தில் நமக்கு குழந்தை இல்லை என, கிண்டல் செய்கின்றனர்' என, மனவேதனையுடன் கூறியுள்ளார். இதையடுத்து, இரவு செல்வம் படுக்கையறையிலும், மனைவி ஹாலிலும் படுத்துறங்கிஉள்ளனர்.மறுநாள் விடியற்காலை 4:00 மணியளவில், படுக்கையறைக்குள் பிரேமா சென்று பார்த்தபோது, மின்விசிறியில் துப்பட்டாவால் துாக்கில் தொங்கிய நிலையில் செல்வம் கிடந்தார்.தகவலறிந்து வந்த '108' ஆம்புலன்ஸ் பணியாளர்கள், செல்வத்தின் உடலை பரிசோதனை செய்ததில், அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஓட்டேரி போலீசார் உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை