உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஸ்தினாபுரம் தகனமேடை தற்காலிகமாக மூடல்

அஸ்தினாபுரம் தகனமேடை தற்காலிகமாக மூடல்

தாம்பரம்,பராமரிப்பு பணி காரணமாக, அஸ்தினாபுரம் எரிவாயு தகனமேடை 31 நாட்களுக்கு மூடப்பட உள்ளதால், குரோம்பேட்டை எரிவாயு தகன மேடையை பொதுமக்கள் பயன்படுத்துமாறு, தாம்பரம் மாநகராட்சி சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தாம்பரம் மாநகராட்சி, 3வது மண்டலம், 22வது வார்டிற்கு உட்பட்ட அஸ்தினாபுரம் பகுதியில் எரிவாயு தகன மேடை இயங்குகிறது.இங்கு, பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், வரும் 29 முதல் பிப்., 28ம் தேதி வரை 31 நாட்களுக்கு, மயான பூமி இயங்காது. எனவே, பொதுமக்கள் 2வது மண்டலம், 28வது வார்டிற்கு உட்பட்ட குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையில் செயல்பட்டு வரும் எரிவாயு தகன மேடையை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை