உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மேல்மருவத்துாரில் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு

 மேல்மருவத்துாரில் ரயில்களுக்கு தற்காலிக நிறுத்தம் நீட்டிப்பு

சென்னை: தைப்பூசம் விழாவை ஒட்டி, மேல்ம ருவத்துாரில், 28 விரைவு ரயில்களுக்கு வழங்கப்பட்டுள்ள தற்காலிக நிறுத்தம், பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. லோக்மானிய திலக் - காரைக்கால், எழும்பூர் - மதுரை வைகை, எழும்பூர் - மதுரை பாண்டியன், கன்னியாகுமரி - நிஜாமுதீன், மதுரை - நிஜாமுதீன், எழும்பூர் - திரு ச்சி ராக்போர்ட், எழும்பூர் - செங்கோட்டை பொதிகை, எழும்பூர் - கொல்லம், எழும்பூர் - நாகர்கோவில், எழும்பூர் - மன்னார்குடி, தாம்பரம் - ராமேஸ்வரம், எழும்பூர் - தஞ்சாவூர் உழவன், தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு, எழும்பூர் - சேலம் உட்பட 28 விரைவு ரயில்கள், இரு மார்க்கத்திலும் மேல்மருவத்துாரில், ஒரு நிமிடம் நின்று செல்ல அனுமதி தரப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நிறுத்தம், மேற்கண்ட அனைத்து ரயில்களுக்கும், வரும் பிப்ரவரி 2ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என, தெற்கு ரயில்வே நேற்று அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை