உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வடபழனி ஆண்டவர் கோவிலில் நாளை தைப்பூச திருவிழா

வடபழனி ஆண்டவர் கோவிலில் நாளை தைப்பூச திருவிழா

சென்னை, ஜன. 24-ஆண்டுதோறும் தை மாதம், பூச நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் கூடிய நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழா தைப்பூசம். அன்று தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.அத்தககைய சிறப்பு பெற்ற தைப்பூச திருவிழா, நாளை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், வடபழனி ஆண்டவர் கோவிலில் நாளை நடக்கிறது.இதை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்படும். 4:30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடக்கிறது.மதியம் 1:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை பக்தர்கள் கொண்டு வரும் பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷிகம் செய்யப்படுகிறது. காலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணிவரை, அபிஷேகம் நீங்கலாக பக்தர்கள் தொடர் தரிசனம் செய்யலாம்.இரவு 8:30 மணிக்கு வெள்ளி மயில் வாகனத்தில், பழனி ஆண்டவர் நான்கு மாடவீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும், வெண்பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை அதிகாலை முதல் இரவு வரை பிரசாதமாக வழங்கப்படுகிறது.சிறப்பு ஏற்பாடுகாவடி எடுத்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்த வருவோர், தரிசனம் செய்ய வரும் பக்தர்களில் முதியோர், கர்ப்பிணியர், கைக்குழந்தையுடன் வருவோர், மேற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.பால்குடம் எடுத்து வருவோர், பொது தரிசனத்திற்கு வருவோர், தெற்கு கோபுரம் வழியாக அனுமதிக்கப்படுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை