உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி சிறுபாலத்தை ஆக்கிரமித்துள்ள குப்பை தொட்டியால் இடையூ

புகார் பெட்டி சிறுபாலத்தை ஆக்கிரமித்துள்ள குப்பை தொட்டியால் இடையூ

சிறுபாலத்தை ஆக்கிரமித்துள்ள குப்பை தொட்டியால் இடையூறு

சென்னை மாநகராட்சியின் பெருங்குடி-, ஆலந்துார் மண்டலத்தின் எல்லை பகுதியாக, விராங்கால் ஓடை விளங்குகிறது. இந்த ஓடையில், என்.எஸ்.சி.போஸ், சிதம்பரம் தெரு சாலையின் நடுவே சிறு பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் தரைமட்டமாக இருந்ததால், பருவமழை காலத்தில் அதன் மேல் செல்லும் மழை வெள்ளம், போக்குவரத்துக்கும் சுற்றுவட்டார பகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஆலந்துார் மண்டலம் சார்பில், பல லட்சம் ரூபாய் செலவில், பாலம் உயர்த்தி அமைக்கப்பட்டது.இந்நிலையில், அந்த பாலத்தின் ஒருபுறம், வாகனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. மற்றொரு புறம் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், பாலத்தின் அகலம் குறைந்து, போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சண்முகம், உள்ளகரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ