உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மீட்கப்பட்ட ரூ.200 கோடி இடத்தை சுற்றி தடுப்பு அமைத்தது மாநகராட்சி

 மீட்கப்பட்ட ரூ.200 கோடி இடத்தை சுற்றி தடுப்பு அமைத்தது மாநகராட்சி

சைதாப்பேட்டை: சைதாப்பேட்டையில் மீட்கப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்புள்ள இடம், மீண்டும் ஆக்கிரமிப்பில் சிக்காமல் இருக்க, இடத்தை சுற்றி தடுப்பு அமைத்து, எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில், அடையாறு ஆற்றை ஒட்டி சத்யா நகர் உள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, ஆற்றங்கரையில் இருந்த 226 வீடுகளை அகற்ற, இரண்டு மாதங்களுக்குமுன் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த இடத்தை ஒட்டி, 200 கோடி ரூபாய் மதிப்பிலான, 1.50 ஏக்கர் காலி இடத்தை, தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். சில நாட்களுக்குமுன், அமைச்சர் சுப்பிரமணியன் இடத்தை பார்வையிட்டு, அடையாறு ஆற்றங்கரை பகுதியில் வருவதால், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில் இடத்தை மீட்கும் படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, நீர்வளத்துறை மற் றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டனர். இந்நிலையில், மீண்டும் ஆக்கிரமிக்கும் சூழல் நிலவியதால், சுற்றி தடுப்பு அமைத்து எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், சுற்றுச்சூழல் பூங் கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை