உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது

முதல்வரை கொச்சைப்படுத்தி வீடியோ பதிவிட்டவர் கைது

சென்னை, மந்தைவெளி பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி; வழக்கறிஞர். இவர், சென்னை சைபர் கிரைம் போலீசில், கடந்த 5ம் தேதியன்று புகார் ஒன்றை அளித்தார்.அதில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் உருவப்படத்தை கொச்சைப்படுத்தி, எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார். அரசுக்குஎதிராகவும், பொது அமைதியை துாண்டும் வகையில், வீடியோ பதிவிட்டுள்ளார். எனவே, சம்பந்தப்பட்டவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின்படி சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்டம் செல்லியம்பட்டி அஞ்சல், மணிபூர் கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன், 28, என்பவர் வீடியோ பதிவிட்டு இருந்தது தெரிந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட நபர், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை