உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்தவர் கைது

பெண்ணுக்கு டார்ச்சர் கொடுத்தவர் கைது

வளசரவாக்கம், தி.நகர், காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், திருமணமாகி, வளசரவாக்கம் பகுதியில் கணவருடன் வசித்து வருகிறார்.இவரது மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத மர்ம நபர், அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என, அவதுாறாக பேசி தொந்தரவு செய்துள்ளார்.இந்நிலையில், கடந்த 6ம் தேதி, வளசரவாக்கத்தில் இளம்பெண் நடந்து சென்றபோது, அந்த நபர் பின்தொடர்ந்து வந்து, தன்னை திருமணம் செய்யுமாறு கூறி மிரட்டியுள்ளார்.இதுகுறித்த புகாரை வளசரவாக்கம் போலீசார் விசாரித்தனர். இளம்பெண்ணை தொந்தரவு செய்த, திருவண்ணாமலை மாவட்டம், மேட்டூரைச் சேர்ந்த மதன், 24, என்பவரை, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்