உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இடம் மாறிய பஸ் நிறுத்தம் சவுமியா நகர் மக்கள் அவதி

இடம் மாறிய பஸ் நிறுத்தம் சவுமியா நகர் மக்கள் அவதி

பெரும்பாக்கம்:மேடவாக்கம் அடுத்த பெரும்பாக்கம் சவுமியா நகரில் 10,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்; 28 தெருக்கள் உள்ளன. வளர்ந்து வரும் பகுதியான சவுமியா நகரில் வசிக்கும் மக்கள், தாம்பரம், வேளச்சேரி, சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், காரணை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவர, மாம்பாக்கம் பிரதான சாலையில், இருபுறமும் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தது.கடந்த 2019ல், அரசியல் பிரமுகர் ஒருவர், தன் வசதிக்காக, சவுமியா நகர் பேருந்து நிறுத்தத்தை பாபு நகருக்கு மாற்றினார். இதனால், சவுமியா நகர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் பாபு நகரில் நிற்கத் துவங்கின.இதை எதிர்த்து சவுமியா நகர் மக்கள் புகார் அளித்தனர். அதன்பின், மேடவாக்கத்திலிருந்து மாம்பாக்கம் உள்ளிட்ட இடங்களை நோக்கி செல்லக்கூடிய பேருந்துகள் மட்டும், சவுமியா நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்கின்றன.ஆனால், மாம்பாக்கம் சாலையிலிருந்து மேடவாக்கம் நோக்கி வரும் பேருந்துகள், தற்போது வரை சவுமியா நகரில் நிற்காமல், பாபு நகர் நிறுத்தத்தில் நிற்கின்றன. இதனால், வேலைக்கு சென்று திரும்பும் பெண்கள், பள்ளி மாணவர்கள், முதியோர் அரை கி.மீ., நடக்க வேண்டிய நிலை உள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அனைத்து பேருந்துகளும் சவுமியா நகர் நிறுத்தத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை