உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ள பாதிப்பின்போது கொள்ளையடித்தவர் சிக்கினார்

வெள்ள பாதிப்பின்போது கொள்ளையடித்தவர் சிக்கினார்

குன்றத்துார், 'மிக்ஜாம்' புயல் பாதிப்பால் கடந்த மாதம் 4ம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது. இதில், வெள்ளக்காடான பகுதிகளில் குன்றத்துார் அடுத்த வரதராஜபுரமும் ஒன்று. பெரும்பாலான குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. இதில், ராஜிவ் நகரில் ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஐந்து குடும்பங்கள், படகு மூலம் மீட்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.தண்ணீர் வடிந்த பின் வீடு திரும்பினர். அப்போது, அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த ஐந்து வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டு 53 சவரன் நகை, 1.60 லட்சம் ரூபாய் உள்ளிட்டவற்றை மர்ம நபர் கொள்ளையடித்து தப்பி சென்றது தெரிய வந்தது. இது குறித்து சோமங்கலம் போலீசார் விசாரித்தனர்.இதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த சூர்யா, 24, என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த சூர்யாவை, சோமங்கலம் தனிப்படை போலீசார் நேற்று கைது, 15 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ