உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காமுக முதியவருக்கு பாடம் புகட்டிய சகோதரியர்

காமுக முதியவருக்கு பாடம் புகட்டிய சகோதரியர்

மயிலாப்பூர், சென்னை மயிலாப்பூர், நாச்சியப்பா தெருவைச் சேர்ந்தவர் மதன் லால், 63. இவர், அந்த பகுதியில் ஐஸ் கிரீம் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இவரது கடைக்கு பிளஸ் 1 மாணவி ஒருவர், ஐஸ் கிரீம் வாங்க வந்தார். அப்போது, மதன் லால் அந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவி, தன் சகோதரியிடம் தெரிவித்துள்ளார். அவர், தங்கையுடன் சென்று மதன் லாலை எச்சரித்துள்ளார்.ஆனால், சகோதரி முன்னிலையிலேயே, 'காமுக' முதியவர் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்டார். சுதாரித்த இருவரும் தயாராக வைத்திருந்த 'பெப்பர் ஸ்பிரே'வை மதன் லால் முகத்தில் அடித்து நையப்புடைத்து, மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசில் ஒப்படைத்தனர்.போலீசார் வழக்கு பதிந்து, நேற்று மதன் லாலை, குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ