சென்னை, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, சென்னையில் இருந்து இரண்டாவது நாளாக நேற்று, லட்சக்கணக்கானோர் புறப்பட்டு சென்றனர்.அரசு, தனியார் பேருந்துகள், கார் போன்ற சொந்த வாகனங்கள் என, ஒரே நேரத்தில் நேற்று திரண்டு சென்றதால், சென்னையில் முக்கிய நுழைவு பகுதிகளான ஜி.எஸ்.டி., சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை, வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.இ.சி.ஆர்., வழியாக செல்லும் பேருந்துகள், விரைவு போக்குவரத்துக் கழகத்தைத் தவிர்த்த அனைத்து போக்குவரத்து கழகங்களின் பேருந்துகளும், கோயம்பேடில் இருந்து இயக்கப்படுகின்றன.ஆனால், தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்துகள் எங்கிருந்து கிளம்புகின்றன என தெரியாமல், பயணியர் குழப்பம் அடைந்தனர்.இதனால் அவர்கள், கோயம்பேடிற்கு வந்து தகவல் மையத்தில் கேட்டு, கிளாம்பாக்கம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களுக்கு புறப்பட்டு சென்றனர். முன்பதிவு செய்த பயணியரே பெரும்பாலும் அவதிக்குள்ளாகினர்.பயணியர் கூறியதாவது:முன்பதிவு செய்த பயணியரை, நடத்துனர்கள் மொபைல் போனில் அழைத்து, கிளாம்பாக்கம் வருமாறு அழைக்கின்றனர். கோயம்பேடில் இருந்து பேருந்துகள் புறப்பட்டாலும், கிளாம்பாக்கமே வரச்சொல்வதால், கோயம்பேடு வந்த அங்கிருந்து கிளாம்பாக்கம் செல்ல வீண் அலைச்சல் ஏற்படுகிறது.அதேபோல், கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகரின் பிரதான பகுதிகளுக்கு, மாநகர சொகுசு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. வடசென்னையில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இரண்டு பேருந்துகளை மாறி சென்றாலே, 60 ரூபாய் கட்டணம் ஆகி விடுகிறது. இத்தடங்களில் சாதாரண கட்டண பேருந்துகளை அதிகப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். நியமனம்
கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து முனையங்கள் மேலாண்மை தலைமை நிர்வாக அலுவலராக, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இதற்கு முன், சென்னை நில நிர்வாக ஆணையரகத்தில் பணிபுரிந்தார்.
அரசு பேருந்து 2,100
சிறப்பு பேருந்து 1,904-அரசு பேருந்துகளில் 4.50 லட்சம்ஆம்னி பேருந்துகளில் 1 லட்சம்ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்