உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரூ.9.20 லட்சம் மதிப்பு யூரோ பறித்தோர் கைது

ரூ.9.20 லட்சம் மதிப்பு யூரோ பறித்தோர் கைது

சென்னை:எழும்பூர், வெங்கி தெருவைச் சேர்ந்தவர் ரியாசுதீன், 55. இவர், வெளிநாட்டு பண பரிமாற்றம் செய்து தரும் கடை நடத்தி வருகிறார்.இரு தினங்களுக்கு முன், காலை 11:00 மணியளவில், 9.20 லட்சம் ரூபாய் மதிப்பில் உள்ள 10,000 யூரோ கரன்சிகளை எடுத்து, இரு சக்கர வாகனத்தில், எழும்பூரில் இருந்து மண்ணடிக்கு சென்றார். சிந்தாதிரிப்பேட்டை, கிழக்கு கூவம் சாலையில், மாநகராட்சி உயர் நிலைப்பள்ளி அருகே சென்றபோது, மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த ஆறு பேர் ரியாசுதீனை மிரட்டி, 10,000 யூரோ கரன்சிகளை பறித்து தப்பினர்.இது குறித்து ரியாசுதீன் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார், சம்பவ இடத்தில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் லால், 27, வண்டலுார் அருகே, ஓட்டேரியைச் சேர்ந்த காஜா மொய்தீன், 48, ஆகியோரை, நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, இரண்டு இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை