உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாநகராட்சி ஊழியரை வெட்டிய மூவர் கைது

மாநகராட்சி ஊழியரை வெட்டிய மூவர் கைது

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, நேரு நகர் முதலாவது தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல், 25. இவர், அண்ணா நகர் மண்டலத்தில், தற்காலிக ஊழியராக, அண்ணா நகர் டவரில் 'டோக்கன்' போடும் வேலை செய்து வருகிறார்.கஞ்சா புகைக்கும் பழக்கமுள்ள இவர் நேற்று, முல்லை நகர் சுடுகாடு அருகே கஞ்சா வாங்க சென்றுள்ளார். வெற்றிவேல் 200 ரூபாய் பணம் கொடுத்து கஞ்சா கேட்ட போது, விற்பனையாளர் அஜய் 300 ரூபாய் கேட்டுள்ளார். இதனால் இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்ட போது, அங்கிருந்த மேலும் மூவரும் சேர்ந்து வெற்றிவேலை தலையில் வெட்டி விட்டு, மொபைல் போனை பறித்து தப்பினர். இதுகுறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார், வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ், 23, ராஜீ, 20, வியாசர்பாடி, இந்திரா நகரை சேர்ந்த ஆகாஷ், 20, ஆகிய மூவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ