உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கட்டுமான கம்பிகள் திருடிய மூவர் கைது

கட்டுமான கம்பிகள் திருடிய மூவர் கைது

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் பகுதியில், பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. அங்கிருந்து இரும்பு கம்பிகள் மாயமாகி வந்தன.தவிர, சோழிங்கநல்லுார் சுற்று வட்டார பகுதிகளில், வீடு புகுந்து நகைகள், வாகனங்களின் பேட்டரி உள்ளிட்டவையும் திருடப்படுவதாக, போலீசாருக்கு புகார்கள் சென்றன.இதையடுத்து, செம்மஞ்சேரி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இரும்பு கம்பிகள் திருடு போனதாக கூறப்படும் கட்டுமான நிறுவனங்கள் உள்ள பகுதிகளில், கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர்.அதன் வாயிலாக, செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு, 6வது தெருவை சேர்ந்த ஜெயக்குமார், 21, ராஜதுரை, 23, மற்றும் 18 வயது சிறுவன் ஆகியோர், இரும்பு கம்பிகளை திருடி வந்தது தெரிந்தது.கஞ்சா புகைக்க பணம் இல்லாததால், அவர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சட்ட நடவடிக்கை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ