ஓட்டேரியில் லாட்டரி விற்பனை தாய், மகன் உட்பட மூவர் கைது
ஓட்டேரி,தலைமைச் செயலக காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நம்மாழ்வார்பேட்டையில், வெளிமாநில லாட்டரி சீட்டு அதிகம் விற்கப்படுவதாக புகார் வந்தது.இதையடுத்து போலீசார், நம்மாழ்வார்பேட்டையில் உள்ள பாஸ்ட்புட் கடை மற்றும் ஆட்டோ நிறுத்தத்தில் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது, லாட்டரி சீட்டு எண்களை துண்டு காகிதத்தில் எழுதி விற்கும் கும்பல் குறித்து கண்டறிந்தனர்.கோடம்பாக்கத்தைச் சேர்ந்த முகேஷ் நடராஜ், 29, வினோத், 21, மற்றும் அவரது தாய் சசிகலா, 39, ஆகிய மூவரும், லாட்டரி சீட்டு விற்று வந்தது தெரிந்து, அவர்களை கைது செய்தனர்.இவர்களிடமிருந்து, மூன்று மொபைல் போன்கள், 1,900 ரூபாய், மொபைல் பிரின்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சசிகலா மற்றும் வினோத் மீது, ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.