உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுற்றுலா பொருட்காட்சி தீவுத்திடலில் துவக்கம்

சுற்றுலா பொருட்காட்சி தீவுத்திடலில் துவக்கம்

சென்னை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டு கழகம் சார்பில், 49வது இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, சென்னை தீவுத்திடலில் நேற்று துவங்கியது. பொருட்காட்சியில் 44 அரங்குகள், 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு விளையாட்டு தளங்கள், 110 சிறிய கடைகள், 30 தனியார் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மார்ச், இறுதி வரை 70 நாட்களுக்கு மேல் நடக்கும் பொருட்காட்சியில், பெரியவர்களுக்கு 40 ரூபாய், 4 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும், 25 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.திங்கள் முதல் வெள்ளி வரை, மாலை 3:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, வார இறுதி நாட்களில், காலை 11:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை, நேரம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சிக்கான, நுழைவு சீட்டை, www.ttdcfair.com, payTm insider, Bookmyshow இணைய தளங்கள் வாயிலாக பெறலாம்.பொருட்காட்சி நடக்கும் நாட்களில், வட சென்னையை சேர்ந்த, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பயனடைந்து வருகின்றனர். இது, வட சென்னை மக்களின் வாழ்வாதாரத்திற்கு, உதவியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை