உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கைவேலி சிக்னலில் போக்குவரத்து மாற்றம்

கைவேலி சிக்னலில் போக்குவரத்து மாற்றம்

மடிப்பாக்கம், வேளச்சேரி - தாம்பரம் சாலையில், விஜயநகர் மேம்பாலம் அடுத்து மடிப்பாக்கம் சந்திப்பு உள்ளது. சைதாப்பேட்டை, வேளச்சேரி, தரமணி, பெருங்குடியில் இருந்து வரும் வாகனங்கள் மடிப்பாக்கம், கீழ்க்கட்டளைக்கு, மடிப்பாக்கம் சந்திப்பு முக்கிய வழித்தடமாக உள்ளது.இதில், விஜயநகர் - தாம்பரம், பள்ளிக்கரணை - வேளச்சேரி வழித்தடத்தில், கைவேலி சிக்னல் ஒன்றரை நிமிடமாக உள்ளது. ஆனால், விஜயநகரில் இருந்து மடிப்பாக்கம் திரும்பும் வாகனங்களுக்கு சிக்னல் நேரம் குறைவாக அமைக்கப்பட்டிருந்தது.தவிர, மெட்ரோ ரயில் பாதை பணி காரணமாக, பரங்கிமலை - வேளச்சேரி உள்வட்ட சாலை, கைவேலி வழியாக மடிப்பாக்கம், கீழ்கட்டளைக்கு வாகனங்கள் இயக்கப்படுகின்றன. இதனாலும், மடிப்பாக்கம் சந்திப்பு சிக்னல் நேரம் குறைவு என்பதாலும், அந்த சந்திப்பில் காலை, மாலை நேரங்களில் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.விஜயநகரில் இருந்து மடிப்பாக்கம் திரும்பும் வாகனங்கள், கைவேலி சந்திப்பு சிக்னலுக்காக வேளச்சேரி - தாம்பரம் சாலையை அடைத்து நிற்பதால், பள்ளிக்கரணை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாமல், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இது குறித்து, நம் நாளிதழில் வரைபடத்துடன் கூடிய செய்தி வெளியிட்டது. இதன் நடவடிக்கையாக போக்குவரத்து போலீசார், கைவேலி சிக்னலில் களப்பணி மேற்கொண்டனர்.இதையடுத்து, மடிப்பாக்கத்தில் இருந்து பள்ளிக்கரணை செல்லும் வாகனங்கள் வலதுபுறம் செல்லாமல் இருக்க தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.அதேசமயம், அனைத்து வாகனங்களும் இடதுபுறம் சென்று, விஜயநகர் மேம்பாலத்தின் கீழ், 'யு - டர்ன்' செய்து பள்ளிக்கரணை நோக்கி செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர்.இதன் காரணமாக, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை