உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நுங்கம்பாக்கத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்

நுங்கம்பாக்கத்தில் நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை, மெட்ரோ ரயில் பணி காரணமாக, அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலையில், நாளை ஒரு நாள் சோதனை முறையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.சேத்துப்பட்டில் இருந்து ஜெமினி மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள், கல்லுாரி சாலை - ஹாடோஸ் சாலை - உத்தமர் காந்தி சாலை வழியாக திருப்பி விடப்படும். இந்த மாற்றுப்பாதை, ஒருவழிப் பாதையாகச் செயல்படுத்தப்படும் ஜெமினி மேம்பாலத்திலிருந்து வரும் வாகனங்கள், டாக்டர் எம்.ஜி.ஆர்., சாலை - வள்ளுவர் கோட்டம் வழியாகச் செல்லலாம் அமைந்தகரை நோக்கி செல்லும் வாகனங்கள், டேங்க் பண்ட் சாலையில் இடது புறம் திரும்பி, நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக அமைந்தகரை மற்றும் பிற இடங்களுக்கு செல்லலாம் வள்ளுவர் கோட்டத்திலிருந்து ஜெமினி மேம்பாலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை - உத்தமர் காந்தி சாலை வழியாகச் செல்லலாம் பிற உட்புற சாலைகள் அனைத்தும் மேற்கண்ட ஒருவழிப்பாதை போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றப்படும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை