மேலும் செய்திகள்
இன்று இனிதாக (23.11.205
2 minutes ago
மனைவியை தாக்கிய கணவர் கைது
5 minutes ago
ஐகோர்ட் நுழைவு வாயில்கள் அனைத்தும் மரபுபடி மூடல்
6 minutes ago
ரூ.1.80 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்
21 hour(s) ago
சென்னை: ஐந்து மாநிலங்களை சேர்ந்த பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி, அடையாறு இளைஞர் விடுதியில், இன்று துவங்குகிறது. மத்திய உள்துறை அமைச்சகம், இளைஞர் நலன், விளையாட்டு துறை மற்றும் மை பாரத் கேந்திரா சார்பில், 17வது பழங்குடி இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி, அடையாறு இளைஞர் விடுதியில் நடைபெற உள்ளது. இது குறித்து, மை பாரத் கேந்திராவின் மண்டல இயக்குநர் செந்தில்குமார் கூறியதாவது: இந்திய மக்கள் தொகையில், பழங்குடி இன மக்கள், 8.6 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த, 2006ம் ஆண்டு முதல், இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சி நடக்கிறது. இதுவரை 3,200 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த ஆண்டு, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா, மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து, 220 பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர். இன்று முதல் ஒரு வாரம் நடைபெறும் நிகழ்ச்சியை, தமிழக கவர்னர் ரவி துவக்கி வைக்கிறார். சென்னையில் உள்ள கல்வி நிறுவனங்கள், மெரினா, மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட உள்ளனர். பரிமாற்ற நிகழ்ச்சியின் போது, 220 பேர், தமிழக மாணவ - மாணவியருடன் கலாசாரம், உணவு, கல்வி உள்ளிட்ட மேம்பாடு தொடர்பாக கலந்துரையாடுவர். இதன் வாயிலாக, பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார வளர்ச்சி மேம்படுவதுடன், தனித்துவமான கலாசாரம் கொண்டவர்களாக மாறுவர். பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இதை பொதுமக்கள் பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
2 minutes ago
5 minutes ago
6 minutes ago
21 hour(s) ago