உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுவன் மீது தாக்குதல் த.வெ.க., பிரமுகர்கள் கைது

சிறுவன் மீது தாக்குதல் த.வெ.க., பிரமுகர்கள் கைது

காசிமேடு,சென்னை, புதுவண்ணாரப்பேட்டை, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்தவர் 13 வயது சிறுவன். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால், கடந்த 20ம் தேதி சிறுவன் அதே தெருவில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த த.வெ.க., பிரமுகர்களான அதே பகுதியை சேர்ந்த, சினிமாவில் பணிபுரியும் சந்துரு, 38; கார் ஓட்டுனர் தினகரன், 37 ஆகியோர், வந்துள்ளனர். இரு மாதங்களுக்கு அந்த இடத்தில் த.வெ.க.,வினர் வைத்திருந்த விளம்பர பேனில், கிரிக்கெட் விளையாடிய போது பந்து பட்டு கிழிந்தது. இதை சுட்டிக்காட்டி, இந்த இடத்தில் விளையாடக் கூடாது என கூறியுள்ளனர். ஆனாலும் சிறுவர்கள் அங்கேயே விளையாடியுள்ளனர். ஆத்திரமடைந்த சந்துரு, தினகரன் ஆகியோர், சிறுவனை அடித்துள்ளனர். இதில் சிறுவனுக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இதுகுறித்து காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் பெற்றோர் கொடுத்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து சந்துரு, தினகரன் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின் இருவரும் நேற்று ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை