கல்லுாரி பஸ் மோதி செம்மஞ்சேரியில் இருவர் பலி
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லுார், காந்தி நகரைச் சேர்ந்தவர்கள் முருகன்,55, நாகராஜ் 54. இருவரும் டெய்லர்.நேற்று மாலை செம்மஞ்சேரி நோக்கி, 'பேஷன் ப்ரோ' ரக 'பைக்'கில் புறப்பட்டனர். செம்மஞ்சேரி குமரன்நகர் சந்திப்பில், வலதுபக்கம் திரும்பும் சிக்னல் மைய தடுப்பு அடைக்கப்பட்டதால், சாலையின் எதிர் திசையில் சென்றனர். அங்குள்ள டாஸ்மார்க் வாசலில் தடுப்பு அகற்றப்பட்ட பாதை வழியாக செல்ல முயன்றனர். அப்போது, கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லுார் நோக்கிச் சென்ற, ஹிந்துஸ்தான் கல்லுாரி பேருந்து மோதி, இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.பள்ளிக்கரணை போலீசார், தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடுகின்றனர்.