உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை மருந்து விற்பனை இரு பெண்கள் கைது

போதை மருந்து விற்பனை இரு பெண்கள் கைது

சென்னை,சென்னை, பழைய வண்ணாரப்பேட்டை பகுதிக்குள், புது வகையான போதைப்பொருள் பயன்படுத்தப்படுவதாக, வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் போலீசார் கண்காணித்தனர். இதில், பழைய வண்ணாரப்பேட்டை, தர்மராஜா கோவில் தெருவைச் சேர்ந்த பவானி, 47, என்பவர், போதை தரும் வலி நிவாரணி மருந்தை விற்றது தெரிந்தது.போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர். இதில், ஆந்திர மாநிலம், சூலுார்பேட்டையில் உள்ள மருந்து கடையில் இருந்து வலி நிவாரணி மருந்து பாட்டில்களை வாங்கி வந்து, போதைக்காக அதிக விலைக்கு விற்றது தெரிந்தது. மேலும், வலி நிவாரணி மருந்தை போதைக்காக வாங்கி பயன்படுத்திய பழைய வண்ணாரப்பேட்டை, போஜராஜன் நகரைச் சேர்ந்த முனிரா, 50, என்பவரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 30க்கும் மேற்பட்ட போதை தரும் வலி நிவாரணி மருந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ