உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  இரும்புலியூர் ப்ரீகாஸ்ட் சுரங்கப்பாதையில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி

 இரும்புலியூர் ப்ரீகாஸ்ட் சுரங்கப்பாதையில் இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதி

தாம்பரம்: தாம்பரம் இரும்புலியூரில், 'ப்ரீகாஸ்ட்' ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையிலான சுரங்கப்பாதை பணி முடிந்ததை அடுத்து, இன்று முதல் அதன் வழியாக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. தாம்பரம், இரும்புலியூர் பாலத்தில், 1 கி.மீ., துாரத்திற்கு சாலை இருவழிப்பாதையாக உள்ளதால், 'பீக் ஹவர்' நேரத்தில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இப்பிரச்னைக்கு தீர்வாக, அங்கு ரயில்வே பாலத்தையும், சாலையையும் அகலப்படுத்தும் பணி நடந்து வந்தது. சாலையின் கிழக்கில், பீர்க்கன்காரணை ஏரியை ஒட்டியுள்ள பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், வேல் மற்றும் தேவநேச நகர்களில் இருந்து வருவோர், இரும்புலியூர் ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்கின்றனர். வண்டலுார் மார்க்கமாக இருந்து வருவோரும், நெடுங்குன்றம், சதானந்தபுரம், வேல் நகர், தேவநேச நகர்களுக்கு செல்ல, அந்த இடத்தில் 'யு - டர்ன்' எடுக்கின்றனர். இதனால், ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் நெரிசல் ஏற்படுவதை தடுக்க, சாலையை அகலப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வாகனங்கள் 'யு - டர்ன்' எடுத்து செல்ல, வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இச்சுரங்கப்பாதை, 'ப்ரீகாஸ்ட்' ரெடிமேட் சிமென்ட் பெட்டி முறையில், 200 அடி நீளத்திற்குன் ஐந்து ரெடிமேட் பெட்டிகள் பொருத்தப்பட்டன. இந்நிலையில், பணிகள் முடிந்ததை அடுத்து, இந்த 'ப்ரீகாஸ்ட்' சுரங்கப்பாதையில், இன்று முதல் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சுரங்கப்பாதையின் பயன் வண்டலுார் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள், நெடுங்குன்றம், சதானந்தபுரம், வேல் நகர், தேவநேச நகர்களுக்கு செல்ல வேண்டும் எனில், ஏரிக்கரை சிக்னல் அருகே இடது புறம் திரும்பி, நேராக சென்று, சுரங்கப்பாதையில் 'யு - டர்ன்' எடுத்து வலது புறமாக செல்லலாம். அப்படியே இடது புறம் திரும்பி, பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக, தாம்பரம் - வேளச்சேரி சாலைக்கும் செல்லலாம். மற்றொரு புறம், பழைய ஜி.எஸ்.டி., சாலை வழியாக வரும் வாகனங்கள், வேல் மற்றும் தேவநேச நகர்களில் இருந்து வருவோர், ஏரிக்கரை பேருந்து நிறுத்தம் அருகே, பெருங்களத்துார் மேம்பாலத்தில் ஏறி, 'யு - டர்ன்' எடுத்து தாம்பரத்திற்கு செல்லலாம். இந்த சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு வந்ததும், ஏரிக்கரை நிறுத்தத்தில் உள்ள சிக்னல் மூடப்படும். அதே நேரத்தில், அங்கு பாதசாரிகள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கப்படும். மேலும், அங்குள்ள பேருந்து நிறுத்தம் அப்படியே இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை