மேலும் செய்திகள்
பிப்., முதல் வாரம் வள்ளலார் மாநாடு
3 minutes ago
மனநலம் குன்றிய 31 பேருக்கு வேலைவாய்ப்பு
5 minutes ago
உண்ணாவிரதம்: 6வது பெண் துாய்மை பணியாளர்கள் அட்மிட்
8 minutes ago
இன்று இனிதாக ... (10.12.2025) சென்னை
10 minutes ago
வேளச்சேரி: தீயணைப்பு நிலையத்திற்கு கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும், நிர்வாக குளறுபடி, வரைபடம் தயாரிப்பதில் இழுபறி போன்ற காரணங்களால், கட்டுமானப் பணியை துவக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட வேளச்சேரி தீயணைப்பு நிலையம், வேளச்சேரி, அன்னை இந்திரா நகரில், வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. வேளச்சேரி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வளாகத்தில் சொந்த கட்டடம் கட்ட, கடந்த ஆண்டு நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், நிர்வாக குளறுபடி, வரைபடம் தயாரிப்பதில் இழுபறி போன்ற காரணங்களால், கட்டுமான பணியை துவக்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இது குறித்து வேளச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: குடியிருப்புக்கு மத்தியில், குறுகலான சாலையில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது. புதிய கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி ஓராண்டுக்கு மேல் ஆகியும் கட்டுமான பணியை துவங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். தீயணைப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: முதலில் தரைத்தளத்துடன் கட்டுமான பணி துவங்கும் வகையில், வரைபடம் தயாரிக்கப்பட்டது. வேளச்சேரி ஏரியை ஒட்டி இடம் உள்ளதால், வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, வரைபடத்தை மாற்ற வேண்டி உள்ளது. ஐந்து தீயணைப்பு நிலையங்கள் கட்டும் வகையில் மொத்தமாக நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், வேளச்சேரிக்கு அதிக நிதி தேவைப்படுவதால், கோப்புகள் நிலுவையில் உள்ளன. அடுத்த ஆண்டு பணி துவங்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
3 minutes ago
5 minutes ago
8 minutes ago
10 minutes ago