உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் சுற்றுச்சுவர்

ஆக்கிரமிப்பை தடுக்க அரசு இடத்தில் சுற்றுச்சுவர்

சோழிங்கநல்லுார், சோழிங்கநல்லுார் மண்டலம், 199வது வார்டு, மாதிரி பள்ளி சாலையில், 7 ஏக்கர் அரசு இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமிக்க, சிலர் முயற்சி செய்தனர்.வருவாய்த் துறை, மாநகராட்சியால் ஆக்கிரமிப்பு தடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட, மாநகராட்சி முடிவு செய்தது.இதற்காக, 1.77 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் அனுமதி பெற்று, விரைவில் பணி துவங்கும் என, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை