உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி ஜரூர்

16 தெருக்களில் குடிநீர் குழாய் அருந்ததி நகரில் பணி ஜரூர்

பெரம்பூர், திரு.வி.க., நகர் தொகுதிக்குட்பட்ட மேட்டுப்பாளையம் அருந்ததி நகரில், புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முந்தைய குழாய்கள் சேதமானதில், குடிநீரில் கழிவுநீரும் கலந்தது. இங்கு, 400க்கும் மேற்பட்ட குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. தற்போது சென்னை பெருநகர குடிநீர் வாரியம் சார்பில் புதிய குழாய் பதிக்கும் பணி, 4.502 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நடந்து வருகிறது. மேட்டுப்பாளையத்தில் 16 தெருக்களிலும், இரண்டு பகுதியிலும் சேர்த்து 1,730 மீட்டர் மற்றும் 930 மீட்டருக்கு புதிய குழாய்கள் பொருத்தப்படுகின்றன.பகுதி மக்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் ஏற்கனவே, 2.5 அங்குலத்திற்கு குடிநீர் குழாய்கள் இருந்தன. தற்போது 2 அங்குலத்தில் குழாய் அமைக்கின்றனர். இதனால் தண்ணீர் அழுத்தம் குறையுமா என்ற சந்தேகம் உள்ளது. ஆனால், அதிகாரிகள் தரப்பில் குறைய வாய்ப்பில்லை என உறுதியளித்து உள்ளனர்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ