உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகம்மாள் நகருக்கு தார்ச்சாலை எப்போது?

அழகம்மாள் நகருக்கு தார்ச்சாலை எப்போது?

வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் 145 வார்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக, கழிவு நீர் குழாய் அமைக்கும் பணி நடந்தது. இதற்காக பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.இவற்றில் சில தெருக்களில் குழாய்கள் பதிக்கப்பட்ட நிலையில், சாலை முறையாக சமன் செய்யப்படவில்லை. இதனால், குண்டும், குழியுமாக மாறி, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இருசக்கர வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை நீடித்தது. இதில், 145வது வார்டு நெற்குன்றம் அழகம்மாள் நகர் பிரதான சாலை, நெற்குன்றம் மற்றும் கோயம்பேடு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.இச்சாலை குடிநீர் வாரிய பணிகளால் குண்டும் குழியுமாக, கடந்த ஓராண்டாக மண் சாலையாக உள்ளது. எனவே சாலையை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.--பாலமுரளி, 45, அழகம்மாள் நகர், நெற்குன்றம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை