உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சர்வதேச செஸ் கோப்பை வெல்வாரா சென்னை வீரர்?

சர்வதேச செஸ் கோப்பை வெல்வாரா சென்னை வீரர்?

சென்னை, மகாலிங்கம் கோப்பைக்கான 14வது சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர் சதுரங்க போட்டி, சென்னை எழும்பூரில் நடக்கிறது. அகில இந்திய சதுரங்க கழகம் ஆதரவுடன், தமிழ்நாடு சதுரங்க கழகம் மற்றும் சக்தி குரூப் இணைந்து நடத்துகின்றன.நேற்று, ஒன்பதாவது சுற்றுகள் நிறைவடைந்தன. இதில், முன்னாள் சாம்பியனான ரஷ்யாவின் சவ்செங்கோ போரிஸ் மற்றும் இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த ஸ்ரீஹரி மோதினர்.விறுவிறுப்பான ஆட்டத்தில், ஸ்ரீஹரி வெற்றி பெற்று, எட்டு புள்ளிகள் பெற்று முன்னிலையை தக்க வைத்தார். இவர், தொடர்ந்து மூன்று நாட்களாக முன்னிலையில் உள்ளார். அவரை தொடர்ந்து, 7.5 புள்ளியில், வியட்நாம் வீரர் நுயென் டக் ஹோவா இரண்டாவது இடத்தில் உள்ளார்.தொடர்ந்து, 7 புள்ளிகளில், கிர்கிஸ்தான் நாட்டின் டோலோகன் டெகின், ரஷ்யாவின் சவ்செங்கோ, பிரான்ஸ் நாட்டின், புஸ்கரா செவன், இந்தியாவின் லக்ஷ்மன், நிதின் பாபு, அபிஷேக் கெல்கர், ஆகாஷ், விஜய், பவார் ஹர்ஷித் உள்ளிட்ட 10 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.இறுதி நாளான இன்று, பத்தாவது சுற்று நடக்கிறது. சென்னை வீரர் தொடர்ந்து முன்னிலையில் இருப்பதால், கேப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை