உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பஸ்சில் நகை திருடும் கில்லாடி பெண் கைது

பஸ்சில் நகை திருடும் கில்லாடி பெண் கைது

சென்னை:மாநகர பஸ்களில் பயணம் செய்யும் பெண்களை திசை திருப்பி, அவர்களிடமிருந்து நகை, பணத்தை திருடும் கில்லாடி பெண்ணை, போலீசார் கைது செய்துள்ளனர்.புறநகர் கமிஷனரகம் வெளியிட்டுள்ள அறிக்கை:அயப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கோமதி, 59. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், திருவேற்காட்டிலிருந்து அம்பத்தூருக்கு, மாநகர பஸ்சில் சென்று கொண்டிருந்தார். பஸ்சை விட்டு இறங்கி பார்த்த போது, பையில் வைத்திருந்த ஏழு சவரன் நகை மாயமாகியிருந்தது.இதுகுறித்து, அம்பத்தூர் போலீசாரிடம் கோமதி புகார் செய்தார். விசாரணையில், கோமதியின் பக்கத்தில் அமர்ந்து பயணம் செய்த, அயப்பாக்கத்தைச் சேர்ந்த பானு, 43, என்ற பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. பானுவிடம் நடத்திய விசாரணையில், கோமதியிடமிருந்து நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும், பஸ்சில் பயணம் செய்த, பல பெண்களின் கவனத்தை திசை திருப்பி, அவர்களிடமிருந்து நகை, பணம் ஆகியவற்றை, பானு திருடியதும் தெரிய வந்தது. இதையடுத்து, பானுவை கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை