உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கி ஊழியர்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி

வங்கி ஊழியர்கள் திட்டியதால் பெண் தற்கொலை முயற்சி

பழவந்தாங்கல்:பழவந்தாங்கல், எல்லை முத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாலதி, 49. இவர், மடிப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில், 40,000 ரூபாய் கடன் பெற்றுள்ளார்.மொத்தம், 21 தவணை செலுத்த வேண்டிய நிலையில், 13 தவணை செலுத்தியுள்ளார். மீதமுள்ள தவணைகளை செலுத்தாததால், மாலதி வீட்டுக்கு சென்ற வங்கி ஊழியர்கள், அவரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.இதில் மனமடைந்த மாலதி, நேற்று முன்தினம் துாக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றார்.சம்பவம் தொடர்பாக, பழவந்தாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி