உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தொழிலாளி கழுத்தில் பாய்ந்த கத்தி அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

 தொழிலாளி கழுத்தில் பாய்ந்த கத்தி அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு

சென்னை: தொழிலாளியின் கழுத்தில் பாய்ந்த கத்தியை, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை டாக்டர்கள் நுட்பமான முறையில் அகற்றி காப்பாற்றினர். இதுகுறித்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் பாஸ்கரன், காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறை இயக்குநர் எப்.ஆண்டனி இருதயராஜன் ஆகியோர் கூறியதாவது: கோயம்பேடைச் சேர்ந்த, 45 வயது நபர், குடும்ப பிரச்னையால், 11ம் தேதி தன்னைத் தானே கத்தியால் கழுத்தில் குத்திக் கொண்டார். இதில், அவரது சுவாசப் பாதை சேதமடைந்து, மூச்சுக் காற்று உள்ளேயே கசிந்து சேகரமா கியது. இதில், முகம் மற்றும் கண் வீங்கிய நிலையில், ராஜிவ்கா ந்தி அரசு மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். உடனே, மயக்க மருந்து செலுத்தப்பட்டு தொண்டை யில், 'டிரக்கியாஸ்டமி' எனப்படும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையின் பல்நோக்கு மருத்துவக் குழுவினர், கத்தியை பாதுகாப்பாக அகற்றினர். பின், சேதமான சுவாச பாதையில், நான்கு தையல்கள் போட்டு, கிழிசல் சரி செய்யப்பட்டது. தற் போது அவர் இயல்பாக உள்ளார். உடல் நிலையைக் கண்காணித்தபின், டிர க்கியாஸ்டமி குழாயையும் நீக்கிவிடலாம். தேவைப்பட்டால் பேச்சு பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்