உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருட்டு இளைஞர் கைது

பைக் திருட்டு இளைஞர் கைது

ஆவடி, ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 38. இவர், கடந்த ஜன. 1ம் தேதி, 'டி.வி.எஸ்., அப்பாச்சி' இருசக்கர வாகனத்தில், ஆவடி அடுத்த மோரை பகுதியில் உள்ள நண்பரின் வீட்டிற்கு சென்றார். இருசக்கர வாகனத்தை வீட்டருகே நிறுத்தியிருந்த நிலையில், திரும்பி வந்து பார்த்தபோது அதை காணவில்லை. புகார் படி விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், மோரை ஏரி பகுதியில் பதுங்கியிருந்த விக்கி, 22 என்பவரை கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். விக்கி மீது பல திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை