உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அயனாவரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

அயனாவரத்தில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

அயனாவரம், சந்தையில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.அயனாவரம் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக, அயனாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று மதியம், அயனாவரம் சந்தை அருகே, போலீசார் கண்காணித்தனர். அப்போது, சந்தையில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரித்ததில், அவரிடம் சிறு சிறு பொட்டலங்களில், கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர், நுங்கம்பாக்கம், புஷ்பா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது ரபிக், 30, என்பதும், இவர் மீது ஏற்கனவே வழக்குகள் இருப்பதும் தெரிந்தது.அவரிடமிருந்து, 1 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை