கவரிங் நகையை அடகு வைக்க முயன்ற வாலிபர் கைது
சென்னை, கொளத்துார் வி.பி.சி.,நகர், 1வது தெருவைச் சேர்ந்தவர் தினகரன், 23. அவர், தி.நகரில் உள்ள இந்தியா கோலட் என்ற தங்க நகை கடன் வழங்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.கடந்த, 22ம் தேதி அன்று நிறுவனத்திற்கு நகைகளை அடமானம் வைப்பதற்காக நபர் ஒருவர் வந்துள்ளார். அவர் கொடுத்த, 26 கிராம் எடையிலான நகை, போலியான நகை என்பதை அறிந்து கொண்டு, மறுநாள் வரும்படி, தினகரன் கூறி அனுப்பி விட்டார்.நேற்று முன்தினம் நிறுவனத்திற்கு நகையை அடகு வைப்பதற்காக வந்த நபரை, கையும் களவுமாக பிடித்து, தேனாம்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.இதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த தனஞ்செயன், 30 என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். கைதான இவர் மீது, ஏற்கனவே குற்ற வழக்கு ஒன்று இருப்பது விசாரணையில் தெரியவந்தது.