உள்ளூர் செய்திகள்

இளைஞர் தற்கொலை

ஆவடி:ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், கணபதி நகரைச் சேர்ந்தவர் மகேஷ் தனம், 32; பழைய இரும்பு வியாபாரம் செய்தார்.இவர், செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை, ஐந்து ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிந்துள்ளது.இதனால் மன உளைச்சலில் இருந்த மகேஷ் தனம், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.திருமுல்லைவாயில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை