உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை ஊசி, மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது

போதை ஊசி, மாத்திரை விற்ற வாலிபர்கள் கைது

புதுவண்ணாரப்பேட்டைபுதுவண்ணாரப்பேட்டையில் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக, புதுவண்ணாரப்பேட்டை போலீசாருக்கு, நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தனர். அங்கு, போதை ஊசிகள், மாத்திரைகள், கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ், 22, பாலாஜி, 20, ஆகியோர், வெளிமாநிலங்களில் இருந்து போதை ஊசிகள், மாத்திரைகளை வாங்கி வந்து, வீட்டில் பதுக்கிவைத்து விற்றது தெரிந்தது.போலீசார், அவர்களிடம் இருந்து, 84 போதை மாத்திரைகள், மூன்று ஊசிகள், 1.5 கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து சந்தோஷ், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி