உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு நிதி இழப்பு தலைவர், செயலாளர் உட்பட 6 பேருக்கு சிறை

கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு நிதி இழப்பு தலைவர், செயலாளர் உட்பட 6 பேருக்கு சிறை

கோவை : கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய தலைவர், செயலாளர் உட்பட 6 பேருக்கு, தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவை பெரியநாயக்கன்பாளையம் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு, 1996ல், மூன்று ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டது. அப்போதைய தலைவர் பால்ராஜ், செயலாளர் சிவா பாலகிருஷ்ணன் ஆகியோர், உதயகுமார், ரமேஷ்குமார், ராஜேந்திரகுமார், சுரேஷ்பாபு ஆகியோரை முறைகேடாக உறுப்பினர்களாக சேர்த்ததாக கூறப்படுகிறது. இதன் பின், சங்க உறுப்பினர் உதயகுமாருக்கு சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தை, 18 லட்சத்துக்கு வாங்க முடிவு செய்து, 1997 மே மாதம் ஒப்பந்தம் செய்தனர்; 11 லட்சம் ரூபாய் முன்பணமும் தரப்பட்டது. 2001ல் தான் நிலம் கிரயம் செய்யப்பட்ட நிலையில், பத்திரப்பதிவுக்கு உண்டான கட்டணம் செலுத்தவில்லை. 'குறைந்த விலைக்கு வாங்க வேண்டிய நிலத்துக்கு, கூடுதல் தொகை தரப்பட்டதால், கூட்டுறவு சங்கத்துக்கு இழப்பு ஏற்பட்டது; நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளது; பத்திரப்பதிவு கட்டணம் செலுத்தாததால், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது' என, உறுப்பினர் நடராஜன் புகார் செய்தார். கோவை வணிக குற்றப்புலனாய்வு பிரிவு (ரூரல்) போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விசாரித்து, தலைவர், செயலாளர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் மீது கூட்டு சதி, நம்பிக்கை மோசடி பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார். இவர்களில், தலைவர், செயலாளர் கைது செய்யப்பட்டனர்; மற்றவர்கள், முன் ஜாமின் பெற்று கோர்ட்டில் சரணடைந்தனர். வழக்கு, ஜே.எம்.எண்: 4 கோர்ட்டில் நடந்தது. மாஜிஸ்திரேட் முனுசாமி விசாரித்து, கூட்டுறவு சங்கத்துக்கு நிதி இழப்பு ஏற்படுத்திய ஆறு பேருக்கும், தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை, ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ