உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வயதான தம்பதியை தாக்கிய போலி போலீசாருக்கு வலை

வயதான தம்பதியை தாக்கிய போலி போலீசாருக்கு வலை

கோவை : போலீஸ் எனக்கூறி வீட்டுக்குள் நுழைந்து, வயதான தம்பதியை தாக்கிய பெண் உள்பட மூன்று பேரை போலீசார் தேடுகின்றனர். கோவை, ரேஸ்கோர்ஸ், ரஹேஜா என்கிளேவ் குடியிருப்பைச் சேர்ந்தவர் ராஜகோபால்(74). இவருடன் மனைவி சரஸ்வதி(70), மகள் மற்றும் இரு பேத்திகள் உள்ளனர். இரு நாட்களுக்கு முன் போலீஸ் எனக்கூறி, பெண் உட்பட மூவர் வீட்டுக்குள் நுழைந்தனர். ராஜகோபாலையும், சரஸ்வதியையும் தரக்குறைவாக திட்டி, கைகளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரித்து, வயதான தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்த சிவராமன், சுரேஷ், ரமா ஆகியோரை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்