உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை மாணவியர் கைத்தறி கூடங்களில் ஆய்வு

வேளாண் பல்கலை மாணவியர் கைத்தறி கூடங்களில் ஆய்வு

அன்னூர் : தமிழ்நாடு வேளாண் பல்கலை மாணவியர் கைத்தறி நெசவு கூடங்களில் ஆய்வு செய்தனர். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை இறுதியாண்டு மாணவர்களுக்கு கிராமங்களில் தங்கி பயிற்சி பெறும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வேளாண் மாணவியர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து கொள்ள சுய உதவி குழுக்களை சந்தித்தனர். மூக்கனூரில் கைத்தறி நெசவு தொழிலில் ஈடுபட்டுள்ள குழு உறுப்பினர்களை சந்தித்து விசாரித்தனர். கைத்தறி நெசவாளர்கள் கூறுகையில்,'25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து, நெசவுத் தொழில் செய்தால், மாதம் 15 சேலைகள் நெய்து, 9,000 ரூபாய் சம்பாதிக்க முடியும். இதற்கு தேவையான நூல் மற்றும் ஜரிகையை வியாபாரிகள் வீட்டுக்கே கொண்டு வந்து கொடுத்து விடுகின்றனர். நெய்து முடித்த சேலைகளை அவர்களே இங்கு வந்து வாங்கி செல்கின்றனர்' என்றனர். கைத்தறி கோரா, பட்டு ரக சேலைகள் நெய்வதற்கு தேவைப்படும் பொருட்கள், தரம், ரகம், தயாரிக்க ஆகும் நேரம், செலவு, விற்பனை முறை ஆகியவற்றை வேளாண் பல்கலை மாணவியர் விசாரித்தனர். கைத்தறிஆடைகளை அதிக அளவில் அணிவதற்கு உறுதிமொழி ஏற்றனர். கைத்தறிக்கு தேவையான மூலப்பொருளான பருத்தியை விளைவிக்கும் விவசாயிகளிடம் பருத்தி ரகம், மகசூல், விலை குறித்து விசாரித்தனர். மாணவியருடன் 'நேர்டு' தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் மூர்த்தி பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ