உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் ஆர்.டி.ஓ., திடீர் ஆய்வு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனையின் குழந்தைகள் வார்டு, எக்ஸ்-ரே பகுதி, ஆண்கள் வார்டு, குறைகள் மற்றும் மருத்துவ கருவிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. பொள்ளாச்சி வருவாய் கோட்டாட்சியர் அழகிரிசாமி பேசியதாவது:மருத்துவமனையில் இருக்கும் குறைகள் தீர்க்கப்பட வேண்டும். அதனால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை நடக்கும் நோயாளிகள் நலசங்க கூட்டம் நடத்த வேண்டி மருத்துவ கண்காணிப்பாளரால் கேட்கப்பட்டிருந்தது. வரும் 13ம் தேதிக்கு பிறகு இந்த கூட்டம் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும்.வால்பாறை பகுதியில் 'எக்ஸ்-ரே' கருவி இல்லாததால், பெரும்பாலான மக்கள் பொள்ளாச்சிக்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் இருக்கும் 'எக்ஸ்-ரே' கருவி சரியாக செயல்படுவதில்லை.இதை இயக்கக்கூடிய பணியாளர்களுக்கும் இதுபற்றி தெரிவதில்லை என புகார் எழுந்துள்ளது. அதனால், 'எக்ஸ்-ரே' கருவி மற்றும் அதன் பணியாளர்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். ஆண்கள் வார்டில் அதிகமாக கூட்டம் காணப்படுவதால், நோயாளிகள் பாதிப்படைகின்றனர். நோயாளிகள் படுக்கையறைகளில் அமர்ந்து உணவு உண்பது, சத்தமாக பேசுவது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும்.இவ்வாறு, ஆர்.டி.ஓ., பேசினார்.பொள்ளாச்சி டி.எஸ்.பி., பாலாஜி, அரசு மருத்துவமனை டாக்டர்கள் யசோதா ராணி மற்றும் சிவகுமார் ஆய்வின் போது உடனிருந்தனர். * இருவார சிறப்பு முகாம்: அரசு மருத்துவமனையில் 24ம் தேதி வரை சிறப்பு முகாம் நடக்கிறது.மருத்துவமனை கண்காணிப்பாளர் இளங்கோவன் கூறியதாவது:மருத்துவமனையின் முன் ''சிறு குடும்பமே முழுமையான வளர்ச்சி'' என்னும் வாசகத்தில் முகாம் குறித்து 'பேனர்' ஒட்டப்பட்டுள்ளது. வரும் இரண்டு வாரங்களுக்கு மருத்துவமனைக்கு வரும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர இலவச கருத்தடை முறைகள் குறித்து முகாம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு தகுதி வாய்ந்த தம்பதியர்கள் இந்த சிறப்பு முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். நிரந்தர கருத்தடை முறைகளாக ஆண்கள், நவீன 'வாசக்டமி' சிகிச்சை செய்து கொள்ளலாம். பெண்கள் 'டியூபக்டமி' மற்றும் 'லேப்ராஸ் கோபிக்' போன்ற சிகிச்சைகள் செய்து கொள்ளலாம். தற்காலிக கருத்தடை முறைகளாக ஆண்கள் ஆணுறை மற்றும் பெண்கள் கருத்தடை வளையம் மற்றும் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தி கொள்ளலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்