உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

கல்வி உதவித்தொகை வழங்கும் விழா

கோவை : ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லூரியில் ப்ளஸ் 2 தேர்வில் அதிக கட் - ஆப் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடந்தது.விழாவில் கல்லூரி இயக்குனர் ராஜாராம் தலைமை வகித்தார். கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் கருணாகரன் பேசியதாவது: கிராமப்புற மாணவர்களால் கல்வியில் சாதிக்க முடியாது என்பது பொய் வார்த்தை. கல்விக்கு கிராமம், நகரம் என்று வேறுபாடு கிடையாது. கவனம் செலுத்தி படிப்பது தான் முக்கியம். கடினமாக உழைத்தால்தான் லட்சியத்தை அடைய முடியும். இன்றைய உலகின் அறிவியல் வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது. அதற்கேற்ப நம் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, கருணாகரன் பேசினார்.செயலாளர் சுதா மோகன்ராம் முன்னிலை வகித்தார். முதல்வர் ஜான் அலெக்ஸ் வரவேற் றார். பிளஸ் 2 தேர்வில் 190க்கு மேல், 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற 17 மாணவ, மாணவியருக்கு இக்கல்லூரியில் நான்கு ஆண்டு பயில்வதற்கான கல்வி உதவித்தொகை வழங்கப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை