உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அறிவியல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்

அறிவியல் கண்காட்சி மாணவர்கள் அசத்தல்

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு அடுத்துள்ள நல்லட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவ,மாணவியரின் அறிவியல் கண்காட்சி நடந்தது. இதனை ஊராட்சி மன்றத் தலைவர் தாமரைதுரை துவக்கி வைத்தார். கண்காட்சியில், எரிமலை எவ்வாறு செயல்படுகிறது, மாதிரி ராக்கெட் உட்பட பல்வேறு அறிவியில் சாதனங்கள் வைக்கப்பட்டு இருந்தது. தலைமை ஆசிரியர் மணியன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மகேஸ்வரன், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். கிணத்துக்கடவு அடுத்துள்ள சென்றாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சியை தலைமை ஆசிரியர் சாந்திதேவசீலி துவக்கி வைத்தார். உதவி ஆசிரியர் சகாயராஜ் முன்னிலை வகித்தார். கண்காட்சியில், அமிலம், காரம் பிரிக்கும் முறை சோதனை செய்யப்பட்டது. பழங்கால ஓலைச்சுவடிகள் படிக்கப்பட்டது. இதயம் இயங்கும் முறை, ஆக்சிஜன் தயாரித்தல், மழைநீர் சேகரிப்பு, வடிகுழாய் செயல்படும் விதம், வைட்டமின் தேவை பற்றியும், காய்கறிகளில் விலங்குகளின் உருவங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ