| ADDED : ஜூலை 14, 2011 09:12 PM
மேட்டுப்பாளையம் : வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழா பூச்சாட்டு
வரும் 19ம் தேதி நடக்கிறது. வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில்
ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்று வருகின்றனர்.
இந்தாண்டு வரும் 19ம் தேதி இரவு 7.00 மணிக்கு குண்டம் விழா பூச்சாட்டும்,
22ம் தேதி லட்சார்ச்சனையும், 23ல் கிராம சாந்தியும், 24 காலையில்
கொடியேற்றமும், மாலையில் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும்
நடக்கிறது. தொடர்ந்து 25ம் தேதி மாலை பொங்கல் வைத்து குண்டம் திறப்பும்,
26 அதிகாலை 3 மணிக்கு அம்மன் அழைப்பும், காலை 6.00 மணிக்கு குண்டம்
இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 27ல் மாவிளக்கும், பூ பல்லக்கில்
அம்மன் திருவீதி உலாவும், 28ல் பரிவேட்டை, வாணவேடிக்கையும், 29ல் மகா
அபிஷேகம், மஞ்சள் நீராட்டும், 30ல் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகள், 1ம் தேதி
குத்துவிளக்கு பூஜை, 2ல் மறுபூஜை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, உதவி
கமிஷனர் குமரேசன், பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் கோவில் ஊழியர்கள்
செய்து வருகின்றனர்.