உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஆய்வு

அவிநாசி :அவிநாசியில் அமைய வுள்ள ஓட்டுச்சாவடிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.அவிநாசி பேரூராட்சி பகுதியில் 19 மற்றும் ஒன்றிய பகுதியில் 167 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. அவிநாசி, திருமுருகன்பூண்டி பேரூராட்சிகளுக்கு அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியிலும், ஒன்றிய பகுதிகளுக்கு பெரியாயிபாளையம் திருவள்ளுவர் அரசு மேல் நிலைப்பள்ளியிலும் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இப்பள்ளிகளில் நேற்று கலெக்டர் மதிவாணன், திடீர் ஆய்வு மேற்கொண் டார்; ஓட்டு பெட்டிகளின் பாதுகாப்பு, மின் வசதி குறித்து பள்ளி தலைமையாசிரியர் சரவணபவன், தேர்தல் அலுவலர்கள் குட்டிநாடான், பழனிசாமியிடம் கேட்டறிந்தார்.கலெக்டர் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில் ஓட்டுச்சாவடிகள், எண்ணிக்கை மையங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரு கின்றன. திங்கட்கிழமை மாலை அனைத்து பகுதிகளும் ஆய்வு செய்யப் பட்டு, அன்று மாலை, உத்தரவு வழங்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஆக 07, 2025 18:06

ரோந்துகளில் SI மட்டுமே வருவதில்லை. வர்றவங்கெல்லாம் பலரும் பண கலெக்ஷன்க்கு மட்டுமே வர்றாங்க. மக்களுக்கு இவங்க நிஜமாவே அங்கு வேலை செய்யும் காவலர்கள்தானா, என்ன போஸ்டிங்ல இருக்காங்க,. டியூட்டில இருக்காங்களானு கூட தெரியாது. மதுபிரியர்களை பயமுறுத்தி பணம் வாங்கி அந்த இடங்களை குத்தகைக்கு கொடுக்கின்ற மாதிரி நடந்துகொள்கின்றனர். அதன் விளைவுதான் உயர்ந்த காக்கி உடையை அணிந்த இவர்களுக்கு மரியாதை இல்லாமல் செய்துக்கொண்டார்கள். இவர்களின் வேலையே பொ து இடத்தில வருபவர்களிடம் அசிங்கமாக பயமுறுத்தி குறைந்த பட்சம் 3000௹ வாங்காமல் விடுவதில்லை. பணம் வாங்கிய பிறகு அறிவுரை கூறுகின்றனர். மொபைலை வைத்து ஃபோட்டோ /வீடியோ எடுப்பதும் உண்டு.. அறைவதும் , பூட்ஸ் காலால் உதைப்பதும் உண்டு. இது அவரவர்களுக்கே தெரியும்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ