உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளே இருந்தாலும் நுாறு சதவீதம் தேர்ச்சி

உள்ளே இருந்தாலும் நுாறு சதவீதம் தேர்ச்சி

கோவை;பத்தாம் வகுப்பு தேர்வில், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர்.கோவை மத்திய சிறையில், 50 ஆண்கள் மற்றும், 4 பெண்கள் என, 54 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.அதில் கைதிகள் மணிகண்டன், 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம், 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார், 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.இவர்கள் அனைவரையும் சிறை எஸ்.பி., செந்தில்குமார் பாராட்டினார். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தனர்.கடந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு தேர்வில், கோவை மத்திய சிறை கைதிகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை